என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ரேஷன் கடை ஊழியர்கள்
நீங்கள் தேடியது "ரேஷன் கடை ஊழியர்கள்"
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் நியாய விலைக்கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. #Rationshop
சென்னை:
தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. ஒரு சில மாவட்டங்களை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் ரேஷன் கடைகள் வழக்கம் போல திறந்து இருந்தன.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் நியாய விலைக்கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன. நகரப்பகுதிகளில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் செயல்பட்டன. மக்களுக்கு ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைத்தன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம் போல் செயல்பட்டன. சென்னையில் 1200 ரேஷன் கடைகள் உள்ளன. டி.யு.சி.எஸ்., சிந்தாமணி, நாம்கோ, காஞ்சீபுரம் மொத்த கூட்டுறவு பண்டக சாலை நடத்தும் கடைகள் உள்ளிட்ட எல்லா நியாய விலைக் கடைகளும் திறந்து இருந்தன. சென்னையில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் அத்தியாவசிய பொருட்கள் பாதிப்பு இல்லாமல் வினியோகிக்கப்பட்டன.
சென்னையில் நியாய விலைக்கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. டி.யூ.சி.எஸ். சார்பில் நடத்தப்படும் 303 ரேஷன் கடைகள் மட்டுமின்றி சிந்தாமணி கடைகள் 198, நாம்கோ கடைகள் 92, காஞ்சீபுரம் சொசைட்டி கடைகள் 417 என அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டன என்றார்.
இதற்கிடையில் வேலை நிறுத்தம் குறித்து தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் கடலூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை இன்று முதல் தொடங்கி உள்ளோம்.
ஆனால் இதுநாள் வரை எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.
இதற்கிடையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.
இந்த போராட்டம் திடீர் என அறிவிக்கவில்லை. இதுசம்பந்தமாக பலமுறை தெரிவித்தும் யாரும் பேச்சு வார்த்தைக்கு அழைக்காததால் இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.
ஆகையால் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் அதனை சந்திக்க தயாராக உள்ளோம். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு சரியான அளவில் பொருட்கள் வழங்காமல் உள்ளனர்.
ஆனால் கடைகளுக்கு பொருட்கள் வந்தஉடன் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து இருப்பு குறைவாக உள்ளது என குற்றம்சாட்டி ரேஷன் பணியாளர்களை அடிமைகளாக மாற்றி அவர்களுக்கு வீண் செலவை ஏற்படுத்தி லஞ்சம் பெற்றுக் கொண்டு சஸ்பெண்டும் செய்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Rationshop
தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. ஒரு சில மாவட்டங்களை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் ரேஷன் கடைகள் வழக்கம் போல திறந்து இருந்தன.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் நியாய விலைக்கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன. நகரப்பகுதிகளில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் செயல்பட்டன. மக்களுக்கு ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைத்தன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம் போல் செயல்பட்டன. சென்னையில் 1200 ரேஷன் கடைகள் உள்ளன. டி.யு.சி.எஸ்., சிந்தாமணி, நாம்கோ, காஞ்சீபுரம் மொத்த கூட்டுறவு பண்டக சாலை நடத்தும் கடைகள் உள்ளிட்ட எல்லா நியாய விலைக் கடைகளும் திறந்து இருந்தன. சென்னையில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் அத்தியாவசிய பொருட்கள் பாதிப்பு இல்லாமல் வினியோகிக்கப்பட்டன.
இதுகுறித்து டி.யூ.சி.எஸ் அண்ணா தொழிற்சங்க கூட்டுறவு பிரிவு செயலாளர் சீனிவாசன் கூறியதாவது:-
இதற்கிடையில் வேலை நிறுத்தம் குறித்து தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் கடலூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை இன்று முதல் தொடங்கி உள்ளோம்.
ஆனால் இதுநாள் வரை எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.
இதற்கிடையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.
இந்த போராட்டம் திடீர் என அறிவிக்கவில்லை. இதுசம்பந்தமாக பலமுறை தெரிவித்தும் யாரும் பேச்சு வார்த்தைக்கு அழைக்காததால் இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.
ஆகையால் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் அதனை சந்திக்க தயாராக உள்ளோம். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு சரியான அளவில் பொருட்கள் வழங்காமல் உள்ளனர்.
ஆனால் கடைகளுக்கு பொருட்கள் வந்தஉடன் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து இருப்பு குறைவாக உள்ளது என குற்றம்சாட்டி ரேஷன் பணியாளர்களை அடிமைகளாக மாற்றி அவர்களுக்கு வீண் செலவை ஏற்படுத்தி லஞ்சம் பெற்றுக் கொண்டு சஸ்பெண்டும் செய்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Rationshop
தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. #RationShopEmployeesStrike
சென்னை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும். ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பொருள்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக தொழிற்சங்கத்தினர் கூறுகையில், அரசுடன் கூட்டுறவு சங்க பதிவாளர், கூடுதல் பதிவாளர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர். #RationShopEmployeesStrike
தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #RationShopEmployees #SellurRaju
சென்னை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே, வேலை நிறுத்தம் அறிவித்துள்ள ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும். அனைத்து பொருள்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொண்டால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். #RationShopEmployees #SellurRaju
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலைக்கடை (ரேஷன் கடை) அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரேஷன் கடை ஊழியர்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
கடந்த பிப்ரவரி 24-ந் தேதி கூடிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு கூட்டத்தின் தீர்மானத்தின் படி, மார்ச் 9-ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்வது என்றும், அதற்கு முன்னதாக மாநிலம் முழுவதும் வேலைநிறுத்த தயாரிப்பு மண்டல மாநாடுகளை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 24-ந் தேதி வரை 10 மண்டல மாநாடுகள் நடைபெற்றது. விருகம்பாக்கம் மாநாட்டில், ஆகஸ்டு 6-ந் தேதி(நாளை) திங்கட்கிழமை வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், ரேஷன் கடை ஊழியர்களின் பிரதான கோரிக்கைகளாக உள்ள சம வேலைக்கு சம ஊதியம், ஒரே துறை, எடை குறைவு இல்லாமல் பொருட்கள் வழங்குதல், சேதாரக் கழிவு அனுமதித்தல், பணி வரன்முறை, மானியத் தொகை விடுவித்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு எவ்வித தீர்வும் காணப்படவில்லை.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் அனைவரும் 6-ந் தேதி(நாளை) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். எனவே அன்று ரேஷன் கடைகள் திறக்கப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews

வேலை நிறுத்தம் அறிவித்துள்ள ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #RationShopEmployees #SellurRaju
சென்னை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், வேலை நிறுத்தம் அறிவித்துள்ள ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாநில அரசு அதிக ஊதியம் வழங்கி வருகிறது. மலைப் பகுதியில் பணிபுரியும் ரேஷன் ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியம் தரப்படுகிறது. ரேஷன் கடை ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசு நல்ல முடிவு எடுக்கும்.
வாரிசு அரசியலை, ஊழலை ஒழிக்கும் கட்சி அதிமுக மட்டும்தான். எப்போதும், எந்த நேரத்திலும் எந்த தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ள கட்சி அதிமுக என தெரிவித்துள்ளார். #RationShopEmployees #SellurRaju
×

X